சீனாவில் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு கட்டப்பட்டுள்ள புதிய ஏவுகணை தாங்கி போர் கப்பல், அந்நாட்டு கடற்படையில் சேர்க்கப்பட்டது.
நான்சாங் (Nanchang) என்று பெயரிடப்பட்டுள்ள அக்கப்பலில் வான் பாதுகாப்பு கருவியும், எதிரி நாடுகளின் நீர்மூழ்கிகள், ஏவுகணைகள் மற்றும் கப்பல்களை தாக்கி அழிக்கும் நவீன ஆயுதங்களும் உள்ளன.
சீனாவிடம் 7,000 டன் எடையுடைய 3ம் தலைமுறை ஏவுகணை தாங்கி போர் கப்பலே இதுவரை இருந்தன. புதிதாக சேர்க்கப்பட்ட நான்சாங் கப்பல் 10,000 டன் எடையுடைய 4ம் தலைமுறை போர் கப்பல் என்பதால், அந்நாட்டு கடற்படையின் வலிமை மேலும் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.