இந்தியாவில் நிமோனியா காய்ச்சல் சீனாவிடமிருந்து பரவலாம் என்ற அச்சத்தால் சுகாதாரத்துறை சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
சீனாவில் புதிய வகை காரனோ வைரஸ் காரணமாக புதிய வகை நிமோனியா காய்ச்சல் வேகமாக பரவி வருவதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.காய்ச்சல், நெஞ்சு எரிச்சல் போன்ற உடல் பாதிப்புகளை ஏற்படுத்தும் நிமோனியா காய்ச்சல் நுரையீரல் செயல்பாட்டை பாதிக்கும் என்றும் ஒரே நேரத்தில் பல உறுப்புகளை செயலிழக்க செய்துவிடும் என்றும் உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து சீனாவில் இருந்து இந்தியா வரும் பயணிகளை முக்கிய விமான நிலையங்களில் மருத்துவர்கள் பரிசோதித்து வருகின்றனர்.