உக்ரைன் விமானத்தை ஈரான் சுட்டு வீழ்த்தியதைத் தொடர்ந்து. ஈராக் ,ஈரான், வளைகுடா நாடுகளின் வான் வழியாக பறப்பதை தவிர்க்குமாறு அனைத்து இந்திய விமானங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஈராக்கிற்கு புனித யாத்திரை மேற்கொண்ட 110 பயணிகள் மும்பை விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பிவைக்கப்பட்டனர். தற்போதைய சூழலில் ஈராக் செல்வது இந்தியர்களுக்கு பாதுகாப்பானதல்ல என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
மும்பை சர்வதேச விமான நிலையத்தில் சுற்றுலாப் பயணிகள் அதிகாலை 2.30 மணி விமானத்திற்காக காத்திருந்தனர். பயணிகளிடம் உடைமைகள் சோதிக்கப்பட்டு போர்டிங் பாஸ்களும் விநியோகிக்கப்பட்டன. ஆனால் திடீரென அதிகாரிகள் அவர்களை விமானத்தில் ஏற விடாமல் தடுத்து விட்டனர். நள்ளிரவு முதல் ஈராக் செல்வதற்கான போர்டிங் பாஸ்களை வழங்க வேண்டாம் என்றும் அதிகாரிகள் விமான நிலையத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.