ஆப்பிரிக்க நாடான ஜாம்பியாவில் தண்ணீர் தேடி வந்த யானை 5 அடி உயரமுள்ள சுற்றுச்சுவரை அனாயசமாக தாண்டிச் செல்லும் வீடியோ வெளியாகி உள்ளது.
லுவாங்வா தேசியப்பூங்காவில் சுற்றுலா பயணிகளுக்காக பல்வேறு இடங்களில் விடுதிகள் கட்டப்பட்டுள்ளன. இங்கு தண்ணீர் தேடிவந்த யானை ஒன்று அங்கிருந்து விடுதியின் சுற்றுச்சுவரைக் கடந்து உள்ளே நுழைந்தது.
பின்னர் தண்ணீரைத் தேடிய அந்த யானை மீண்டும் வனப்பகுதிக்குள் செல்ல எத்தனித்தது. அப்போது சுற்றுச்சுவர் 5 அடி உயரம் வரை கட்டப்பட்டிருந்ததால், சில வினாடி யோசித்த அந்த யானை சமயோசிதமாக முன்னங்காலை மடக்கி பின்னர் பள்ளத்தில் சர்வசாதாரணமாக இறங்கிச் சென்றது. யானையின் இந்த செயலை விடுதியில் இருந்த ஒருவர் வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டுள்ளார்.