ஜப்பானில் பேரழிவுக்கு உண்டான புகுஷிமா அணு உலை பகுதிகளில் விலங்குகளில் நடமாட்டம் காணப்படுவது விஞ்ஞானிகளை ஆச்சரியப்பட வைத்துள்ளது.
2011-ம் ஆண்டு நிலநடுக்கத்துடன் ஆழிப் பேரலைகள் தாக்கியதில் ஜப்பானின் புகுஷிமா டாய்ச்சி அணுமின் நிலையம் விபத்துக்குள்ளானது.
அணுமின் நிலையத்தின் அணு உலைகள் அனைத்தும் பாதிக்கப்பட்டு கதிர்வீச்சு வெளியானது. முற்றிலும் கைவிடப்பட்ட இந்த அணு உலைப் பகுதியில் 100க்கும் மேற்பட்ட இடங்களில் தானியங்கி கேமரா மூலம் விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தினர்.
அப்போது காட்டுப் பன்றி, குரங்குகள், ரக்கூன் வகை நரிகள், மான்கள், கரடி உள்ளிட்ட உயிரினங்கள் சுற்றித் திரிவது தெரியவந்துள்ளது. இதையடுத்து மேற்குறிப்பிட்ட விலங்குகள் கதிர்வீச்சில் இருந்து எப்படி தப்பிக்கின்றன என்ற ஆய்வைத் தொடங்க இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.