ஈராக்கிலிருந்து வெளியேற வேண்டும் என்று அந்நாட்டு அரசு விடுத்த கோரிக்கையை அமெரிக்கா நிராகரித்து விட்டது.
ஈரான் தளபதி சுலைமானி கொல்லப்பட்ட சம்பவத்தை அடுத்து, வெளிநாட்டு வீரர்கள் தங்கள் நாட்டிலிருந்து வெளியேற வேண்டுமென ஈராக் நாடாளுமன்றம் கடந்த 5ம் தேதி தீர்மானம் நிறைவேற்றியது. இதையடுத்து அமெரிக்க வெளியுறவு அமைச்சர் பாம்பியோவிடம் பேசிய ஈராக் பிரதமர் அடல் அப்துல் மெஹ்தி, அமெரிக்க வீரர்களை திரும்ப அழைப்பது குறித்து விவாதிக்க குழுவை அனுப்பி வைக்கும்படி கோரிக்கை விடுத்தார்.
இந்நிலையில், அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஈராக்கிலிருந்து அமெரிக்க வீரர்கள் வெளியேற மாட்டார்கள், ஐஎஸ் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையிலும், அமெரிக்கர்கள், ஈராக்கியர்கள், கூட்டணி நாட்டினரின் நலன்களை பாதுகாக்கும் நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.