பாகிஸ்தானில் கொலை செய்யப்பட்ட 25 வயது சீக்கிய இளைஞர் ரவீந்தர் சிங்கை அவருடைய காதலியே கூலிப்படையை ஏவி கொலை செய்ததாக விசாரணையில் புலனாகியுள்ளது.
பெஷாவர் நகரின் மழை நீர் தேங்கிய குளத்தில் அவருடைய உடல் கடந்த ஞாயிற்றுக்கிழமை கண்டுபிடிக்கப்பட்டது. உடலிலும் தலையிலும் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து அந்த இளைஞர் கொல்லப்பட்ட நிலையில் இந்தியா கடும் கண்டனம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், ரவீந்தர் சிங்கின் காதலியான பிரேம் குமாரி என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். மலேசியாவில் இருந்து வந்த ரவீந்தர் சிங்கை திருமணம் செய்ய விரும்பாத காதலியே கூலிப்படையை ஏவி கொலை செய்தது தெரிய வந்தது. கொலை சம்பவத்தை திசைதிருப்பும் வகையில், பணம்கேட்டு கொலையாளிகள் மிரட்டல் விடுத்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.