ஆஸ்திரேலியாவில் புதர்தீயால் பாதிக்கப்பட்டோருக்கு உதவும் வகையில் நடத்தப்பட்ட ஏலத்தில், அந்நாட்டு கிரிக்கெட் அணி முன்னாள் வீரர் ஷேன் வார்னேயின் தொப்பி 4 கோடியே 92 லட்சம் ரூபாய்க்கு (1 million australian dollars) ஏலம் எடுக்கப்பட்டுள்ளது.
புதர் தீயால் பாதிக்கப்பட்டோருக்கு உதவ முன்வர வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்து இருந்த ஷேன் வார்னே, டெஸ்ட் போட்டியில் தாம் தலையில் அணிந்து ஆடிய பச்சை நிற தொப்பியை ஏலத்தில் விட்டார். அதை வரலாறு காணாத விலையாக அவருடைய ரசிகர் ஒருவர், இந்திய மதிப்பில் 4 கோடியே 92 லட்சம் ரூபாய்க்கு ஏலத்தில் வாங்கினார்.
முன்னாள் ஜாம்பவான் பிராட்மேனின் தொப்பி 3 கோடி ரூபாய்க்கு ஏலம் போனதே சாதனையாக இருந்தது. அதைவிட அதிக விலைக்கு வார்னேயின் தொப்பி தற்போது ஏலம் எடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ள வார்னே, நன்றி நன்றி ஏலம் எடுத்த ஏலதாரர்கள் அனைவர்க்கும் நன்றி. குறிப்பாக வெற்றிகரமான ஏலதாரருக்கு மனமார்ந்த நன்றி.
ஏலம் எடுக்கப்பட்ட தொகை என் எதிர்பார்ப்புகளுக்கு அப்பாற்பட்டது. ஏலத்தில் வரும் பணம் செஞ்சிலுவை புதர் தீ நிவாரண நிதிக்கு நேரடியாக செல்லும் என கூறியுள்ளார் வார்னே.