ஈரான் மீது அமெரிக்கா போர் தொடுக்கும் நிலை வந்தால் போர் தீர்மானத்திற்கு எதிராக பிரதிநிதிகள் சபையில் வாக்களிக்கப்படும் என்று சபாநாயகர் நான்சி பெலோசி (Nancy Pelosi) தெரிவித்திருக்கிறார்.
தற்போதைய சூழலில் பதற்றத்தை தணித்து, அமெரிக்க மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான எந்த திட்டமும் தம்மிடம் இல்லை என்று அதிபர் டிரம்ப் கூறியதை அடுத்து ஜனநாயக கட்சியினர் இந்த முடிவுக்கு வந்துள்ளனர்.
எம்.பி.க்களுடன் நடந்த சந்திப்பில் போர் குறித்த அச்சத்தை நீக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ(Mike Pompeo) தவறி விட்டதாகவும் அக்கட்சி கூறி உள்ளது. 1973 ல் கொண்டுவரப்பட்ட போர் அதிகாரச் சட்டங்களின் படி, பெரிய யுத்த நடவடிக்கைகளை எடுக்க அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஒப்புதல் தேவை.
பிரதிநிதிகள் சபையில் தோற்றாலும், செனட் சபையில் டிரம்பின் குடியரசுக் கட்சிக்கு பெரும்பான்மை உள்ளதால் ஒப்புதல் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.