கம்போடியாவில் இருக்கும் ஹாங்காங் நிறுவனத்துக்கு சொந்தமான சூதாட்ட விடுதியில் பணிபுரியும் இளம்பெண்கள் உள்ளிட்ட 2 ஆயிரம் பேர், ஊதிய உயர்வு கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கம்போடியாவின் பினோம் பென் (PHNOM PENH) பகுதியில் ஹாங்காங்கை சேர்ந்த நாகாகார்ப் நிறுவனத்துக்கு சொந்தமான சூதாட்ட விடுதி உள்ளது. இங்கு பணிபுரியும் இளம்பெண்கள், இளைஞர்கள் உள்ளிட்ட 3 ஆயிரம் பேர், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஹோட்டல் ஊழியர்களுக்கு மாதம் 300 அமெரிக்க டாலர் மற்றும் சூதாட்ட மாடியில் இருப்பவர்களுக்கு ஒரு மாதத்திற்கு 500 டாலர் சம்பளம் வழங்க கோரி போராட்டம் நடைபெற்றது. வேலைநிறுத்தம் செய்த தொழிலாளர்களுக்கு தற்போது ஊதியம் ஒரு மாதத்திற்கு 150 முதல் 250 டாலர் வரை வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
போராட்டத்தின்போது அசம்பாவிதம் ஏற்படாமல் தவிர்க்கும் வகையில் அங்கு துப்பாக்கி ஏந்திய பாதுகாப்புப் படையினர் நிறுத்தப்பட்டிருந்தனர்.
Watch Polimer News Online at https://bit.ly/2Qrv39p