சீனாவில் இறைச்சிக்காக கொல்ல அழைத்து செல்லப்பட்ட கர்ப்பிணி பசு, வதை கூடத்துக்கு செல்லாமல் அடம்பிடிக்கும் வீடியோ வைரலானதையடுத்து, அதை பொதுமக்கள் விலைக்கு வாங்கி கோயிலில் ஒப்படைத்த நெகிழ்ச்சியான சம்பவம் நடைபெற்றுள்ளது.
குவாங்டாங் மாகாணம் (Guangdong Province) சான்டோவில் (Shantou) கடந்த 4ம் தேதி வதைகூடத்துக்கு அழைத்து வரப்பட்ட பசு, தாம் கொல்லப்பட போகிறோம் என்பதை அறிந்ததுபோல, முட்டிப் போட்டு கொண்டு நகர மறுத்தது.
இந்த வீடியோ சீனாவில் வைரலாக பரவியது. இதையடுத்து பொதுமக்கள் சிலர் இணையதளம் மூலம் நிதி திரட்டி சுமார் இரண்டரை லட்சம் ரூபாய் (2700 பவுண்ட்) கொடுத்து வாங்கி, அங்குள்ள கோயிலில் பசுவை ஒப்படைத்தனர்.
Watch More ON : https://bit.ly/35lSHIO