ஈரானுடனான மோதல் போக்கையடுத்து மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்கப் படைகள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு அமெரிக்கா அறிவுறுத்தி உள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன் அமெரிக்கா நடத்திய தாக்குதலில் ஈரான் ராணுவத் தளபதி காசிம் சுலைமானி கொல்லப்பட்டார். இதையடுத்து இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் வளைகுடா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்கப் படைகளுக்கு புதிய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ஈரான் ராணுவம் தனது நகர்வுகளை அதிகரித்து வருவதாகவும், அமெரிக்கப் படைகளின் மீது ஆளில்லா விமானம் மூலமோ அல்லது ஏவுகணைகள் மூலமோ தாக்குதல் நடத்தப்பட வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, அமெரிக்க வீரர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும், ஆளில்லா விமானங்களை வீழ்த்தும் ஏவுகணைகளை தயார் நிலையில் வைத்திருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Watch Polimer News Online at https://bit.ly/2Qrv39p