சீனாவின் ஹெனான் மாகாணத்தில் உள்ள யுண்டாய் (Yuntai Mountain) மலைப்பகுதியில் நிலவும் பனிப்பொழிவை, சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியுடன் அனுபவித்து வருகின்றனர்.
அகழி, நீர்வீழ்ச்சி மற்றும் மூலிகைத் தோட்டங்கள் நிறைந்த யூண்டாய் மலைப்பிரதேசம், தேசிய வன மற்றும் நிலவியல் பூங்காவாக உள்ளது.
பசுமையாக காட்சியளித்த இந்த மலைப்பகுதி, பனிப்பொழிவு காரணமாக, வெள்ளைக் கம்பளம் போர்த்தியதைப் போன்று மாறியுள்ளது.
பனி சூழ்ந்த இதமான காலநிலையை அனுபவித்து மகிழும் சுற்றுலாப் பயணிகள், புகைப்படம் எடுத்தும், பனித்துகள்களை ஒருவர்மீது ஒருவர் வீசியெறிந்தும் ஆனந்தமடைகின்றனர்.