சீனாவில் நடைபெற்று வரும் பனித்திருவிழாவில் பங்குபெற்ற, பென்குயின் குட்டிகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
ஹார்பின் நகரில் நடைபெற்று வரும் இந்த விழாவில், 2 முதல் 3 வயது வரையிலான 5 பென்குயின்கள் பனிப்பாதையில் நடந்து காட்டின.
சிறிய பையை மாட்டிகொண்டு சிறகுகளை விரித்தவாறு நடந்த பென்குயின்களை சிறுவர்கள் தொட்டு விளையாடியும், பெரியவர்கள் கேமராக்கள் மூலம் படம் எடுத்தும் ரசித்து மகிழ்ந்தனர்.