அமெரிக்காவால் கொல்லப்பட்ட ஈரான் ராணுவ தளபதி காஸிம் சுலைமானியின் இறுதிச் சடங்கில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 35 பேர் கொல்லப்பட்டதாகவும், சுமார் 50 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் அந்நாட்டு தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.
பாக்தாதில் அமெரிக்காவின் வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரான் தளபதி காஸிம் சுலைமானியின் இறுதிச் சடங்குகள் அவரது சொந்ந ஊரான கெர்மான் நகரில் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ள ஆயிரக்கணக்கானோர் திரண்டனர்.
அப்போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு 35 பேர் பலியானதாகவும், இறந்தவர்களின் உடல்கள் சாலை ஒரங்களில் காணப்பட்டதாகவும் ஈரான் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது. இதனிடையே, பழிவாங்கும் நடவடிக்கையாக,அமெரிக்க போர் வீரர்களை தீவிரவாதிகளாக அறிவிக்கும் தீர்மானம் ஈரான் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.