காஸிம் சுலைமானி கொல்லப்பட்டதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக, அமெரிக்காவின் ஆதரவு நாடுகள் தீ வைத்து அழிக்கப்படும் என ஈரான் புரட்சிப் படை தலைவர் ஹுசைன் சலாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அமெரிக்காவின் தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரான் குவாட்ஸ் படைத் தளபதி காஸிம் சுலைமானியின் இறுதி ஊர்வலம் டெஹ்ரானில் நடைபெற்றது. அதில் கறுப்பு உடை அணிந்து லட்சக்கணக்கானோர் பங்கேற்றனர். அவர்கள் இஸ்ரேலுக்கு மரணம் காத்திருக்கிறது என பொருள்படும் முழக்கங்களை எழுப்பினர்.
அப்போது பேசிய ஹுசைன் சலாமி, அமெரிக்காவின் ஆதரவு நாடுகள் தீ வைத்து அழிக்கப்படும் என எச்சரித்தார். காஸிம் சுலைமானியின் உடல் கெர்மான் நகருக்கு கொண்டு வரப்பட்டு இன்று மாலை அடக்கம் செய்யப்படுகிறது.