பாகிஸ்தானில் சீக்கியர்கள் குருத்வாரா தாக்கப்பட்ட விவகாரத்தில் முக்கியக் குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளான். பாகிஸ்தானில் லாகூர் அருகே உள்ளது குருத்வாரா நான்கனா சாஹிப் கோவில்.
சீக்கியர்களின் முதல் குருவான குருநானக் அவதரித்த இடம் என்பதால் இந்த இடத்தை மிகவும் புனித இடமாகக் கருதி வழிபட்டு வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் குருத்வாராவிற்கு வந்த மர்ம கும்பல் புனிதத் தலத்தின் மீதும், சீக்கியர்கள் மீதும் கல்லால் எறிந்து தாக்குதல் நடத்தியது.
குருத்வாராவை சூறையாடிய வன்முறை கும்பல் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி டெல்லி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சீக்கியர்கள் பேரணி நடத்தினர். இந்நிலையில் குருத்வாராவை சூறையாடிய கும்பலைச் சேர்ந்த முக்கிய குற்றவாளி இம்ரான் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பாக்.கில் உள்ள பஞ்சாப் மாகாண அரசு 'டுவிட்டரில்' தெரிவித்துள்ளது.