இங்கிலாந்தில் தனக்கு வழிவிட மறுத்த காரினை இடித்து தள்ளிய பள்ளி வாகன ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.
லண்டனின் கிழக்குப் பகுதியில் உள்ள சிங்போர்ட் என்ற இடத்தில் சில வாகனங்கள் சாலையில் விரைவாகச் சென்று கொண்டிருந்தன. அப்போது கார் ஒன்று சுமாரான வேகத்திலும், அதற்குப் பின் வந்த பள்ளி வாகனத்திற்கு வழிவிடாமலும் சென்று கொண்டிருந்தது.
இதனைக் கண்ட பள்ளி வாகனத்தின் ஓட்டுநர், பலமுறை ஒலி எழுப்பியும் அதனை கார் ஓட்டுநர் கண்டு கொள்ளாததால் கோபமடைந்தார். இதையடுத்து வாகனத்தின் வேகத்தை அதிகரித்த பள்ளி வாகன ஓட்டுநர், காரினை இடித்துத் தள்ளினார். இதில் கார் சேதமடைந்தது. ஆனால் யாருக்கும் காயமேற்படவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில் பள்ளி வாகன ஓட்டுநரை போலீசார் கைது செய்தனர்.
Watch Polimer News Online at https://bit.ly/2Qrv39p