பேஸ்புக்கைப்போல, வாட்ஸ் அப் செயலியிலும் விளம்பரங்களை வெளியிடும் முறை, மிக விரைவில் நடைமுறைக்கு வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பேஸ்புக் நிறுவனத்துக்கு சொந்தமான வாட்ஸ் அப் செயலியை, உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோர் பயன்படுத்துகின்றனர். ஆனாலும் அதில் விளம்பரங்கள் வெளியிடுவது இல்லை. இந்நிலையில், வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ்களுக்கு இடையிடையே, விளம்பரங்களை வெளியிட அந்நிறுவனம் முடிவுசெய்துள்ளதாகவும், மிக விரைவில் இது அமல்படுத்தப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
விளம்பர நிறுவனத்தின் பெயர் மட்டும் சில நொடிகள் திரையில் தெரியும் எனவும், தேவைப்பட்டால் அந்த விளம்பரத்தை க்ளிக் செய்து பார்த்துக்கொள்ளலாம் எனவும் கூறப்படுகிறது.