போலந்து நாட்டில் பரவிவரும் பறவைக்காய்ச்சலைக் கட்டுப்படுத்த ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட கோழிகள் அழிக்கப்பட்டுள்ளன.
போலந்து நாட்டின் கிழக்குப் பகுதியில் உள்ள லுப்லின் (Lublin) மாகாணத்தில், கோழிகளுக்கு H5N8 என்ற பறவைக் காய்ச்சல் வேகமாக பரவுகிறது. பறவைக் காய்ச்சலால் 25 ஆயிரம் கோழிகள் உயிரிழந்த நிலையில், நோய் மேலும் பரவாமல் தடுக்க, 60 ஆயிரம் கோழிகள் கொல்லப்பட்டன. இதேபோன்று போலந்தின் மேற்கு பகுதியில், 65 ஆயிரம் கோழிகள் அழிக்கப்பட்டன.