ஜப்பானை சேர்ந்த உணவக உரிமையாளர் ஒருவர் 276 கிலோ எடை கொண்ட புளூபின் ட்யூனா மீனை சுமார் 13 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளார்.
சுஷி சன்மாய் என்ற பெயரில் உணவகங்களை நடத்தி வரும் கியோஷி கிமுரா என்பவர் தான், இவ்வளவு விலை கொடுத்து மீனை ஏலம் எடுத்தவர். அட்லாண்டிக் புளூபின் வகையை சேர்ந்த இந்த மீன் அதிகபட்சமாக 680 கிலோ எடை மற்றும் 10 அடி நீளம் வரை வளரும் தன்மை கொண்டதாகும்.
40 ஆண்டுகள் வரை உயிர்வாழும் தன்மை கொண்ட இந்த மீன் அழிந்து வரும் நிலையில் இருப்பதால், அரிதாகக் கிடைத்த மீனுக்கு இவ்வளவு விலை கிடைத்துள்ளது.
இது அதிக விலையாக இருந்தாலும் தனது வாடிக்கையாளர்களுக்கு சுவையான மீனை வழங்க வேண்டும் என்பதற்காக வாங்கியதாகக் கூறும் கிமுரா, இதற்கு முன்பு கடந்த ஆண்டும் 278 கிலோ எடை கொண்ட மீனை 22 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.