பைபிளில் குறிப்பிடப்பட்டிருந்த 3 அரசர்களைப் போற்றும் விதமான திருவிழா ஸ்பெயினில் கோலாகலமாக நடைபெற்றது.
இயேசு கிறிஸ்து பிறந்தபோது, அவரை முதலில் சந்தித்ததாகக் கூறப்படும் மெல்சியார், கேஸ்பர் மற்றும் பல்தஸார் ஆகியோரை நினைவு கூறும் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்பட்டு வருகிறது.
ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட் நகரில் நடந்த விழாவில் மேற்கூறிய வேடமிட்டவர்கள் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர்.
பின்னர் யானை, குதிரைகள், மான்கள் என தத்ரூபமாகத் தயாரிக்கப்பட்ட உருவங்கள் மக்களைக் கவர்ந்தன. இந்த நிகழ்ச்சியை சாலையின் இருமருங்கிலும் ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் திரண்டிருந்து கண்டு களித்தனர்.