ஈராக்கில் இருந்து அமெரிக்கப் படைகளை வெளியேற்றுவதற்கு ஆதரவாக அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பாக்தாத் விமான நிலையம் அருகே அமெரிக்கா நடத்திய தாக்குதலில் ஈரானின் ராணுவத் தளபதி காசிம் சுலைமானி உயிரிழந்தார். ஈரானுக்கும், அமெரிக்காவிற்கும் இடையே போர்மூளும் சூழல் நிலவுவதால், வளைகுடா நாடுகளில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், வெளிநாட்டுப் படைகளை வெளியேற்றுவது குறித்த தீர்மானம் ஈராக் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையான உறுப்பினர்கள் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது.
ஷியா பிரிவினர் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்த இருந்தநிலையில், சன்னி பிரிவு உறுப்பினர்கள் நாடாளுமன்றத்திற்கு வராமல் தவிர்த்தனர். ஐ.எஸ். அமைப்புக்கு எதிரான போரில் ஈராக்கிற்கு உதவ 5 ஆயிரத்து 200க்கும் மேற்பட்ட அமெரிக்க வீரர்கள் கடந்த 4 ஆண்டுகளாக முகாமிட்டிருந்தனர்.