அமெரிக்காவின் வான் தாக்குதலில் ஈரானின் படைத்தளபதி சுலைமானி கொல்லப்பட்டதையடுத்து நிலவும் பதற்றமான சூழல் குறித்து அமெரிக்க வெளியுறவு அமைச்சர் போம்பியோ மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருடன் தொலைபேசியில் ஆலோசனை நடத்தினார்.
ஏற்கனவே வாஷிங்டனில் இந்திய தூதரை அழைத்து ஆலோசித்த போம்பியோ தொலைபேசி மூலம் உலக நாடுகளின் தலைவர்களை தொடர்பு கொண்டு அமெரிக்கா ஈரானில் நடத்திய தாக்குதல் குறித்து விளக்கம் அளித்து வருகிறார்.
இந்நிலையில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரை தொலைபேசியில் தொடர்பு கொண்ட போம்பியோ, ஈரான் தொடர்ந்து அமெரிக்கர்களை மிரட்டி அச்சுறுத்தலாக விளங்குவதாக தெரிவித்தார்.
அமெரிக்கர்களையும் அவர்களின் நண்பர்களையும் உயிருடனும் பாதுகாப்பாகவும் வைத்திருக்க டிரம்ப் அரசு நிர்வாகம் கடுமையான நடவடிக்கை எடுக்கத் தயங்காது என்று அப்போது போம்பியோ உறுதிபடத் தெரிவித்துள்ளார்.