ரஷ்யாவில் பனி வெடிப்பில் சிக்கி 40க்கும் மேற்பட்ட வாகனங்கள் நீருக்குள் மூழ்கின. விளாடிவோஸ்டாக் அருகில் உள்ள ரஸ்கி தீவில் உறை பனிக்காலம் முடிவடைந்த நிலையில் அங்கு ஏராளமானோர் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது உருகிய பனியில் திடீரென வெடிப்பு ஏற்பட்டது. பல நூறு மீட்டர் நீளத்திற்கு ஏற்பட்ட பனி வெடிப்பினால் அப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 40க்கும் மேற்பட்ட வாகனங்கள் நீருக்குள் முழுமையாக மூழ்கின.
சில வாகனங்கள் நீருக்கு அடியில் இருந்த உறைபனியில் சிக்கிக் கொண்டன. இதனையறிந்த அப்பகுதி மக்கள் ஒன்று திரண்டு ஏனைய வாகனங்களில் கயிறு கட்டி நீருக்குள் மூழ்கிய வாகனங்களை மீட்டெடுத்தனர்.
சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் கூறுகையில், எல்லோரும் அவரவர் வாகனங்களை பனிக்கட்டி மீது ஓட்டி ஒன்றாக நிறுத்தி இருந்தனர். அப்போது ஏதிர்பாராவிதமாக பனி வெடித்தது. இது டோமினோ விளைவு போன்றது.
பனி வெடித்ததில் சில கார்கள் ஓரளவு தண்ணீருக்கு அடியில் மூழ்கின, பிற கார்கள் தண்ணீருக்கு மேலே கூரைகள் மட்டுமே தெரியும் வகையில் மூழ்கி இருந்தன. சில கார்கள் சுமார் 7 அடி ஆழத்தில் நீருக்கு அடியில் சிக்கியதாகவும் குறிப்பிட்டார்.
Watch Polimer News Online at https://bit.ly/2Qrv39p