இங்கிலாந்தில் இளம் குத்துச் சண்டை வீரர் ஒருவர் கார் மோதுவதில் இருந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
லண்டனைச் சேர்ந்த ஸாக் மெக் கேப்ஸ் எனப்படும் இளைஞர் உள்ளூர் குத்துச்சண்டை போட்டியில் புகழ்பெற்றவர். இவர் டோவர் என்ற இடத்தில் கடை வீதியில் நடந்து சென்றபோது கார் ஒன்று மற்றொரு கார் மீது பின்பக்கம் மோதியது. இதில் நிலைகுலைந்த கார் தலைகுப்புறக் கவிழ்ந்து அருகில் இருந்த கடையின் மீது மோதியது.
காருக்கும், கடைக்கும் நடுவே சிக்கிக் கொண்ட கேப்ஸ் கணப்பொழுதில் சுதாரித்துக் கொண்டதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். கேப்ஸ் இமைப்பொழுதில் உயிர் தப்பிய சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.