அமெரிக்காவில் கிளைடர் விமானத்தில் பறந்தவர் கயிறுகள் அறுந்ததில் நூலிழையில் உயிர் தப்பிய வீடியோ வெளியாகி உள்ளது.
கலிபோர்னியாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கடற்கரைப் பகுதியில் கிளைடர் விமானத்தில் பறப்பதை பொழுதுபோக்காகக் கொண்டிருந்தார். கடந்த சில தினங்களுக்கு முன் கடலை ஒட்டியிருந்த சிறிய குன்றில் இருந்து தனது நண்பர்கள் உதவியுடன் அவர் கிளைடர் விமானத்தில் பறக்கத் தொடங்கினார்.
சுமார் 300 அடி உயரத்திற்கு மேல் பறந்து கொண்டிருந்த அந்த இளைஞர், காற்றின் வேகத்திற்கு ஏற்ப கிளைடரின் உயரத்தை அதிகரித்தார். அப்போது எதிர்பாராதவிதமாக கிளைடரையும், அந்த நபரையும் இணைத்திருந்த அனைத்து கயிறுகளும் ஒருசேர அறுந்தன. இதனால் நிலை தடுமாறிய அந்த இளைஞர் கம்பியைப் பிடித்து தொங்கியபடியே கடற்கரையில் பத்திரமாகத் தரையிறங்கினார்.