ஈரான் ஆதரவு பயங்கரவாத குழுக்கள் தாக்குதல் நடத்தலாம் என்ற அச்சத்தால், இஸ்ரேலில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஈராக்கில் அமெரிக்கா நடத்திய தாக்குதலில் ஈரான் ராணுவ தளபதி சுலைமானி, உள்ளிட்டோர் கொல்லப்பட்டனர். அமெரிக்க தாக்குதலுக்கு பதிலடியாக ஈரான் ஆதரவு அமைப்புகளான ஹெஸ்புல்லா ((hezbollah)), ஹமாஸ், இஸ்லாமிக் ஜிகாத் ஆகியவை தங்கள் மீது தாக்குதல் நடத்தலாம் என இஸ்ரேல் சந்தேகிக்கிறது. எனவே ஏவுகணை மற்றும் ராக்கெட் வீச்சை தடுப்பது உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகளை இஸ்ரேல் செய்துள்ளது.