உலகின் முதன்மையான தீவிரவாதியான காசிம் சுலைமானியை தமது உத்தரவின் பேரில் அமெரிக்க படையினர் மிகச்சரியாக திட்டமிட்டு தாக்கி அழித்ததாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க உயர் அதிகாரிகளைக் கொல்வதற்கு அவர் திட்டமிட்டதாகவும் கையும் களவுமாக சிக்கிய அவரை அமெரிக்க வீரர்கள் கொன்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஒரு போரை நிறுத்தவே இந்த தாக்குதல் நடத்தப்பட்டது, போரை தொடங்குவதற்காக அல்ல என்றும் டிரம்ப் தெரிவித்தார்.
ஈரான் மக்கள் மீது மிகுந்த மதிப்பு உண்டு என்றும் குறிப்பிட்டுள்ள அமெரிக்க அதிபர், ஈரானின் கொடுங்கோன்மையும் அண்டை நாடுகள் மீது மறைமுக யுத்தம் தொடுக்கும் போக்கும் முடிவுக்கு வர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
ஈராக் தலைநகர் பாக்தாதில் உள்ள சர்வதேச விமான நிலயத்தில் அமெரிக்கப் படைகள் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் ஈரானின் புரட்சி பாதுகாப்பு படையின் குருதுஸ் பிரிவு தளபதி குவாசிம் சுலைமானி கொல்லப்பட்டதையடுத்து அமெரிக்கா-ஈரான் இடையே போர் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.