அடுத்தடுத்து ஏற்பட்ட விபத்துக்களால் அமெரிக்காவிடம் இருந்து வாங்கிய பிளாக்ஹாக் ஹெலிகாப்டரின் பயன்பாட்டை நிறுத்தி வைக்க தைவான் அரசு உத்தரவிட்டுள்ளது.
தைவானின் முப்படைகளின் தலைமைத் தளபதி உள்ளிட்ட 12 ராணுவ உயரதிகாரிகள் சென்ற ஹெலிகாப்டர் அண்மையில் விபத்துக்குள்ளானதில் 8 பேர் கொல்லப்பட்டனர்.
இதையடுத்து விமானப் படை, ராணுவம் மற்றும் மீட்புக் குழுவுக்குச் சொந்தமான 52 யூஹெச்-60 எம் பிளாக் ஹாக் ரக ஹெலிகாப்டர்களின் பயன்பாட்டை நிறுத்திவைக்க அந்நாட்டு அரசு உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், அந்த ஹெலிகாப்டர்களின் கட்டமைப்பு, அதிலுள்ள கருவிகளின் மென்பொருள், ராடார் சாதனம் உள்ளிட்டவற்றில் ஏதாவது கோளாறு உள்ளதா என ஆய்வு செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது. அமெரிக்க தயாரிப்பான ‘பிளாக் ஹாக்’ ரக ஹெலிகாப்டர்கள், அண்மைக் காலமாக அடிக்கடி விபத்துகளை சந்தித்து வருகிறது.