செவ்வாய் கிரகத்தில் ரோபோ மூலம் ஆக்சிஜனை உற்பத்தி செய்ய நாசா திட்டமிட்டு உள்ளது.
அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்ய, நடப்பு ஆண்டில் புதிய ரோவர் ரோபோவினை அனுப்பவுள்ளது. அந்த ரோவரின் புகைப்படத்தினை தற்போது வெளியிட்டுள்ளது நாசா. இந்த ரோவர் செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வாழக்கூடிய சாத்தியம் குறித்து ஆராயவுள்ளது.
இதில் 23 கேமிராக்கள், 2 மைக்குகள் இணைக்கப்பட்டுள்ளன. வருகிற ஜுலை மாதம் ரோபோ விண்ணில் செலுத்தப்படவுள்ளது.செவ்வாய் கிரகத்தில் ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்கும் சாத்தியக்கூறுகள் குறித்து இந்த ரோபோ ஆராய உள்ளது.