மூன்று நாள் அரசு முறைப் பயணமாக மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங் ரஷ்யா தலைநகர் மாஸ்கோவை சென்றடைந்தார்.
அவரை ரஷ்ய பாதுகாப்பு துணை அமைச்சர் அலெக்சாண்டர் ஃபோமின் இந்தியத் தூதரக அதிகாரிகள் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
இன்று அதிபர் புதினுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். இந்தியாவுக்காக ரஷ்யா தயாரிக்கும் ஏவுகணைத் தாங்கிக் கப்பல்களின் முதல் 2 கப்பல்களை இந்தியாவிடம் ரஷ்யா ஒப்படைக்க உள்ளது.