ரோமன் கத்தோலிக் கிறிஸ்தவ திருச்சபையின் கர்தினாலாக ஜார்ஜ் நியமிக்கப்பட்டிருப்பது, நாட்டிற்கு மகிழ்ச்சியும் பெருமையும் அளிக்கிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
கேரளாவின் செங்கனாச்சேரியைச் சேர்ந்த பேராயர் ஜார்ஜ் கூவாக்ட்டிற்கு வாடிகனில் நடைபெற்ற விழாவில் போப் பிரான்சிஸ், கர்தினால் பட்டத்தை வழங்கி, ஆசீர்வதித்தார்.
இந்த நிகழ்வில், இந்நாள், முன்னாள் மத்திய இணயமைச்சர்கள், கேரள எம்.பி.க்கள் உள்ளிட்டோர் இந்திய அரசின் சார்பில் பங்கேற்றனர்.
சகிப்புத்தன்மையை உலகிற்கு வழங்குவதில் வரலாற்று ரீதியாகவே இந்தியா ஒரு முன்மாதிரியாக விளங்கி வருவதாக பதவியேற்பு விழாவில் கர்தினால் ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.