ரஷ்ய தலைநகரம் மாஸ்கோ மீது உக்ரைன் இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய டிரோன் தாக்குதல் நடத்தியது. 2022 ம் ஆண்டு இருநாடுகளுக்கும் இடையில் யுத்தம் மூண்டதில் இருந்து இத்தகைய தாக்குதல் நடத்தப்படவில்லை என்று கூறப்படுகிறது.
மாஸ்கோவின் குடியிருப்பு பகுதிகள் உள்பட பல்வேறு இலக்குகளைக் குறி வைத்து 30 டிரோன்கள் தாக்குதலில் ஈடுபட்டன.
இத்தாக்குதலில் பல வீடுகள் கட்டடங்கள் மற்றும் வாகனங்கள் சேதம் அடைந்தன, பெரும்பாலான டிரோன்களை ரஷ்யாவின் ராணுவம் சுட்டு வீழ்த்தியது. ஆனால் சில டிரோன்கள் தப்பி வானத்தில் வட்டமிட்டன.
இத்தாக்குதலின்போது முன்னெச்சரிக்கையாக மாஸ்கோவின் 3 விமானநிலையங்களில் இருந்தும் விமானங்கள் திருப்பி விடப்பட்டன.