கியூபாவில் கரை கடந்த ரபேல் புயலால், தலைநகர் ஹவானா மற்றும் ஆர்ட்டிமிசா நகரங்களில், கடும் சேதம் ஏற்பட்டது. புயல் கரை கடந்தபோது மணிக்கு 115 கிலோமீட்டர் வேகத்தில் சூறைக் காற்று வீசியதால் பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்து, சாலைகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சாலையோரம் இருந்த மின் கம்பங்கள், டிரான்ஸ்பார்மர்கள் கீழே சாய்ந்து மின் வினியோகம் பாதிக்கப்பட்டது. வீடுகள் இடிந்தும், தகரக் கொட்டகைகள் காற்றில் தூக்கி வீசப்பட்டும் சேதம் ஏற்பட்டுள்ள நிலையில், அந்நாட்டு தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.