இஸ்ரேல் நாடாளுமன்றத்தில், குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கிய முதல் நாளில், பொதுமக்கள் சிலர், ஹமாஸ் அமைப்பினரால் கடந்தாண்டு பிணை கைதிகளாக பிடித்து செல்லப்பட்டவர்களை மீட்க வலியுறுத்தி, நாடாளுமன்றத்தில் உள்ள தேநீர் விடுதியில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பிணை கைதிகளின் உறிவினர்கள் சிலர், பிணை கைதிகளைப் போலவே கைகள் பின்பக்கம் கட்டப்பட்ட நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து, ஓராண்டுக்கு மேலாக ஹமாஸ் பிடியில் உள்ள தங்கள் உறவினர்களை மீட்குமாறு வலிறுத்தினர்.