அமெரிக்காவில் பள்ளி மாணவர்களிடையே துப்பாக்கி கலாசாரம் அதிகரித்திருப்பது கவலை அளித்திருப்பதாக தெரிவித்த அதிபர் ஜோ பைடன், தாக்குதல் நடத்துக் கூடிய அளவிலான துப்பாக்கியை தடை செய்ய வேண்டுமென அழைப்பு விடுத்தார்.
ஜார்ஜியாவில் உள்ள அபலாச்சி உயர்நிலைப் பள்ளியில் 14 வயது மாணவர் ஒருவர் சக மாணவர்கள் 2 பேரையும், அதேப் பள்ளியின் ஆசிரியர்கள் 2 பேரையும் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்ததையும், ஒரே நாளில் பல்வேறு இடங்களில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் காயமடைந்ததையும் அதிபர் ஜோ பைடன் சுட்டிக் காட்டினார்.