உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 50 பேர் உயிரிழந்ததாகவும், 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. போல்டாவா நகரில் உள்ள ராணுவ அகாடெமியையும், அருகிலுள்ள மருத்துவமனை மீதும் ரஷ்யா இரு பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து தெரிவித்த உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, ரஷ்யா இந்த தாக்குதலுக்கு விலை கொடுக்க வேண்டி வரும் எனக்கூறினார். மேற்கத்திய நாடுகள் தங்களுக்கு வான் பாதுகாப்பு அமைப்புகளையும், ஏவுகணைகளையும் வழங்குமாறும், ஆயுதங்களுக்கான நிதியை விரைந்து விடுவிக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.