வெனிசுலாவில் நேற்று நாடு தழுவிய அளவில் மின் விநியோகம் பாதிக்கப்பட்டு முக்கிய நகரங்கள் இருளில் மூழ்கிய நிலையில், இரவில் படிப்படியாக மின்சாரம் திரும்பத் தொடங்கியது.
கடந்த மாதம் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் முறைகேடு நடந்ததாக கூறி எதிர்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். அந்நாட்டின் மிகப்பெரிய நீர்மின் திட்டத்திலிருந்து நாடு முழுவதும் மின்சாரத்தை கடத்தி செல்லும் உயர் அழுத்த மின் கம்பிகளை எதிர்கட்சி ஆதரவாளர்கள் சேதப்படுத்தியதாக அதிபர் நிகோலஸ் மடுரோ குற்றம்சாட்டியுள்ளார்.