ரஷ்யாவின் குர்ஸ்க் பிராந்தியத்தின் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியபடி உக்ரைன் படைகள் முன்னேறி வருவதால், வெடிகுண்டு தாக்குதலில் இருந்து மக்களை பாதுகாக்கும் கான்கிரீட் அறைகளை அங்குள்ள பேருந்து நிறுத்தங்கள் அருகே ரஷ்ய அரசு அமைத்து வருகிறது.
நேரடி ஏவுகணை தாக்குதலில் இருந்து இவை மக்களை பாதுகாக்காத போதும், குண்டு வெடிப்பின்போது வெடித்து சிதறும் உலோகப் பொருட்களில் இருந்து தற்காத்துக்கொள்ள உதவும் என கூறப்படுகிறது.
குர்ஸ்க் பிராந்தியத்தில் ஆயிரத்து 200 சதுர கிலோமீட்டர் நிலத்தை கைப்பற்றியுள்ளதாக தெரிவித்த உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, ரஷ்யா உடனான போர்நிறுத்த பேச்சுவார்த்தையின்போது அது தங்களுக்கு சாதகமாக அமையும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.