ஜப்பானின் வான்வெளியில் சீன ராணுவ விமானம் அத்து மீறி நுழைந்தது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாத நடவடிக்கை என ஜப்பான் கண்டனம் தெரிவித்துள்ளது. ஜப்பானின் க்யூஷு தீவின் மேற்கே உள்ள டான்ஜோ தீவுப் பகுதியில், சீனாவின் ஒய்-9 உளவு விமானம் பறந்து சென்றதாகக் கூறப்படுகிறது.
ஜப்பானின் ஜெட் விமானங்களை சீன விமானம் துரத்தியதாகவும் கூறப்படும் நிலையில், டோக்கியோவில் உள்ள சீன தூதரக அதிகாரியை வரவழைத்து ஜப்பான் அரசு தனது கண்டனத்தைத் தெரிவித்தது. சீனாவின் அத்துமீறல் ஜப்பானின் இறையாண்மையை மீறுவதோடு, நாட்டின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் என ஜப்பானின் அமைச்சரவை செயலர் தெரிவித்துள்ளார்.