உக்ரைனின் மேற்குப் பகுதியில் உள்ள சுமி நகர் மீது ரஷ்யாவின் தாக்குதலைத் தவிர்க்கவே குர்ஸ்க் பிராந்தியத்தில் ஊடுருவி தாக்குதல் நடத்தப்பட்டதாக அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்தார். தலைநகர் கீவில், போலந்து அதிபர் ஆண்ட்ரெஜ் டுடா, லிதுவேனியா பிரதமர் இன்கிரிடா சிமோனைட் ஆகியோருடனான செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், உக்ரைனில் தயாரிக்கப்பட்ட பாலியான்ட்சியா ட்ரோன் ஏவுகணை மூலம் ரஷ்யாவின் குர்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள், ராணுவ விமான நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தெரிவித்தார். பாலியான்ட்சியா ஏவுகணைகள் வேகமானது என்றும் அதிக சக்தி வாய்ந்தவை என்றும் தெரிவித்த அவர், அவற்றின் மூலம் ரஷ்யாவுக்கு சரியான பதிலடி தரப்படுவதாகவும், குர்ஸ்க் பிராந்தியம் மீதான தாக்குதலின் பின்னணியில் வேறு சில குறிப்பிடத்தக்க நோக்கங்கள் இருப்பதாகவும் தெரிவித்தார்.