ஐஸ்லாந்தின் கிரிண்டாவிக் நகரின் அருகே எரிமலை வெடித்ததை தொடர்ந்து நெருப்புக் குழம்பு ஆறாக வெளியேறி ஓடுகிறது. கடந்த டிசம்பரில் அந்த எரிமலை வெடித்ததை அடுத்து தற்போது 6ஆவது முறையாக நெருப்பு குழம்பை வெளியேற்றுவதாக அந்நாட்டின் வானியல் மையம் தெரிவித்துள்ளது.
எரிமலை வெடிப்பு ஏற்பட்டுள்ள ரெய்க்ஜேன்ஸ் தீபகற்பம் பல தசாப்தங்கள் அல்லது பல நூற்றாண்டுகள் மீண்டும் மீண்டும் இதேபோல் வெடிப்புகளை எதிர்கொள்ளக்கூடும் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.