இத்தாலி அருகே 330 கோடி ரூபாய் சொகுசு படகு கடலில் மூழ்கி பிரிட்டன் நாட்டு பெருங்கோடீஸ்வரர் மைக் லிஞ்ச் உள்பட மாயமான 6 பேரை தேடும் பணிகள் 3 நாட்களாக நடந்துவருகின்றன.
நிதி மோசடி வழக்கில் கைதாகி, ஓராண்டுக்கு மேலாக வீட்டு காவலில் இருந்த மைக் லிஞ்ச் அண்மையில் விடுதலை ஆனார். அதனை கொண்டாட குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் தனது சொகுசு படகில் மத்திய தரைகடலில் சுற்றுலா சென்றுள்ளார்.
திங்கட்கிழமை அதிகாலை, சிசிலி கடற்கரையில் இருந்து 300 மீட்டர் தொலைவில் படகு நிறுத்தப்பட்டிருந்தபோது, கடலில் திடீரென ஏற்பட்ட முகில் நீர்த்தாரை தாக்கி படகு கவிழ்ந்ததாக அதன் கேப்டன் தெரிவித்தார்.
15 பேர் நீந்தி கரை சேர்ந்த நிலையில், மைக் லிஞ்ச், அவரது 18 வயது மகள், வழக்கறிஞர் உள்பட 6 பேர் மாயமானதாக கூறப்படுகிறது. கடலின் மேல்மட்டத்தில் உருவாகும் சுழல் காற்று, நீர் துளிகளுடன் வானை நோக்கி ஃபனல் வடிவில் எழும்பும்போது முகில் நீர்த்தாரைகள் ஏற்படுகின்றன.