கடலுக்கடியில் உயிரினங்கள் வாழ உகந்த சூழலை உருவாக்குவதில் முக்கிய பங்காற்றும் கடற்புற்களை, ற் படுகையில் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் நடவு செய்தனர்.
வெப்ப மண்டல காடுகளை விட 3 மடங்கு அதிக கார்பன்-டை-ஆக்ஸைடை உறுஞ்சி ஆக்சிஜனை வெளியிடக்கூடிய பொஸிடோனியா ரக கடற்புற்கள், மத்திய தரை கடலில் மட்டுமே காணப்படுகின்றன.
புவி வெப்பமயமாதல் மற்றும் கடலில் கலக்கும் தொழிற்சாலை கழிவுகளால் இவை வேகமாக அழிந்துவருவதால், இவற்றின் பரப்பளவை அதிகரிக்க ஆராய்ச்சியாளர்கள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுவருகின்றனர்.