வடகொரியாவின்அணு ஆயுதத் தயாரிப்பு மற்றும் சைபர் தாக்குதல் மிரட்டல்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, அமெரிக்க மற்றும் தென்கொரியப் படைகள் இணைந்து, 10 நாள் கூட்டு ராணுவப் பயிற்சியைத் தொடங்கியுள்ளன.
வரும் 29ம் தேதி வரை நடைபெற உள்ள கூட்டு ராணுவப் பயிற்சிக்கு எதிர்ப்புத் தெரிவித்து, தென்கொரிய ஜனாதிபதி அலுவலகம் முன், ஒரு தரப்பினர் போராட்டம் நடத்திய நிலையில், போர் ஒத்திகை போன்ற இந்த கூட்டுப் பயிற்சியை நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.