கத்தாரில் இன்று நடைபெற இருந்த காஸா போர் நிறுத்த பேச்சுவார்த்தையில் பங்கேற்கப்போவதில்லை என ஹமாஸ் அறிவித்துள்ளது.
காஸாவில் இருந்து படைகளை முழுவதுமாகவிலக்க இஸ்ரேல் சம்மதித்தால் மட்டுமே பிணை கைதிகளை விடுவிப்பது தொடர்பான பேச்சுவார்த்தையில் பங்கேற்க போவதாகவும் ஹமாஸ் தெரிவித்துள்ளது.
அண்மையில் ஹமாஸ் முன்னாள் தலைவர் ஹனியே ஈரானில் வைத்து கொல்லப்பட்ட நிலையில், போர் நிறுத்த பேச்சுவார்த்தையில் உடன்படிக்கை ஏற்பட்டால், ஈரானால் இஸ்ரேலுக்கு பதிலடி கொடுக்க முடியாமல் போய்விடும் என்பதற்காக ஹமாஸ் பேச்சுவார்த்தையில் இருந்து பின்வாங்கியதாக கூறப்படுகிறது.