ஆப்கானில் மீண்டும் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி 3 ஆண்டுகள் நிறைவு செய்ததை பிரம்மாண்ட ஆயுத அணிவகுப்புடன் தாலிபான்கள் நினைவுகூர்ந்தனர். 2021-ம் ஆண்டு, அமெரிக்க ராணுவம் கணித்ததை விட தாலிபான்கள் வேகமாக முன்னேறி வந்ததால் ஆப்கானை விட்டு அமெரிக்க படைகள் அவசர அவசரமாக வெளியேறினர்.
தாலிபான்களின் கைகளுக்கு சென்றுவிடக்கூடாது என்பதற்காக தங்களுக்குச் சொந்தமான 70 போர் விமானங்களையும், ஏராளமான கவச வாகனங்களையும் அமெரிக்க ராணுவம் அழித்துவிட்டு சென்றது. இருந்தபோதும் அவர்கள் விட்டுச் சென்ற பீரங்கிகள், ஹெலிகாப்டர்கள் உட்பட ஏராளமான ஆயுதங்கள் தாலிபான்கள் வசம் சென்றன.