சுவையான தேனுக்கு பெயர் பெற்ற ஏமன் நாட்டில் நடைபெற்ற தேன் திருவிழாவில், 30 ஆண்டுகள் முதல் 50 ஆண்டுகள் வரை பழமையான தேன் ரகங்கள் விற்பனை செய்யப்பட்டன.
இத்தனை ஆண்டுகள் ஆகியும் நறுமனம் மாறாமல் இருப்பதாக மக்கள் தெரிவித்தனர். ஏமனில், ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக தேனீ வளர்ப்பு பிரதான தொழிலாக இருந்துவரும் நிலையில், அங்கு அமெரிக்க ஆதரவு பெற்ற அரசு படைகளுக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே நடந்துவரும் உள்நாட்டு போரால், தேன் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.