ஜபோர்ஷியா அணுமின் நிலையத்தில் பற்றி எரிந்த நெருப்பால் கதிர்வீச்சு வெளிப்படவில்லை என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலையமான ஜபோர்ஷியா அணுமின் நிலையம் 2 ஆண்டுகளுக்கு மேலாக ரஷ்ய படைகளின் கட்டுப்பாட்டில் உள்ளது.
அங்குள்ள ஒரு குளிரூட்டும் கோபுரத்துக்குள் நேற்று பலத்த வெடி சத்தத்துடன் தீப்பற்றி எரிந்ததாக கூறப்படுகிறது. ரஷ்ய படைகள் அதனை ஆயுத கிடங்காக பயன்படுத்திவருவதாகவும், அவர்களின் கவனக்குறைவால் வெடிமருந்து எதுவும் தீப்பற்றி இருக்கலாம் என உக்ரைன் தெரிவித்துள்ள நிலையில், உக்ரைன் படைகளின் பீரங்கி தாக்குதலால் தீப்பற்றியதாக ரஷ்யா குற்றம்சாட்டியுள்ளது.